Sunday, August 31, 2008

திரைப்பட மக்கள் தொடர்பாளார் திருத்துறைப்பூண்டி பாலன்


திருத்துறைப்பூண்டி பாலன் என்கிற ஜி.பாலசுப்பிரமணியன், 1965-ல் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள வடசங்கந்தியில் பிறந்தவர்.அப்பா ந.கோபாலகிருஷ்ணன் , அம்மா நாகரத்தினம். சண்முகசுந்தரம், நமச்சிவாயம் என இரு சகோதரர்கள். வைரக்கண்ணு, ராஜலட்சுமி என இரு சகோதரிகள். மனைவி பெயர் தமிழ்ச்செல்வி, மகன் மலர்வண்ணன், மகள் மதுபாலா.

சின்ன வயதிலிருந்தே எழுத்தின் மீது தீராத காதல். பல வார இதழ்களில் 60-க்கும் மேற்பட்ட சிறுகதைகள் எழுதியிருக்கிறா‌ர். நினைவெல்லாம் நீதானே, மனசுக்குள் வரலாமா, வேண்டுமடி நீ எனக்கு, குடிமகன், சரசு, சவுந்தர்யா மற்றும் மனுஷி ஆகியவை நூல்களாக வடிவம் பெற்றுள்ளன.

பிரபல மக்கள் தொடர்பாளர்கள் பிலிம் நியூஸ் ஆனந்தன் மற்றும் டயமன்ட் பாபு ஆகியோரின் உதவியாளராக 1992-ல் சேர்ந்தார், சூப்பர் ஸ்டார் ரஜினியி‌ன் மன்னன் படத்தில் முதன் முதலாக உதவி மக்கள் தொடர்பாளராக பணியாற்றினார்‌. இளைய திலகம் பிரபு நடித்த 100 வது படமான ராஜகுமாரன் வரை பல படங்களில் டயமன்ட் பாபுவின் உதவியாளராக பணியாற்றினார்‌.

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் மக்கள் தொடர்பாளராக 4 ஆண்டுகள் பணியாற்றினார். வி.சேகர் தனது திருவள்ளுவர் கலைக்கூடம் சார்பில் தயாரித்து இயக்கிய விரலுக்கேத்த வீக்கம், கூடி வாழ்ந்தால் கோடி நன்மை, வீட்டோட மாப்பிள்ளை, நம்ம வீட்டுக் கல்யாணம், ஏய் (இயக்கம்- வெங்கடேஷ்), மாஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனத்தின் சார்பில் எஸ்.எஸ்.துரைராஜ் அவர்கள் தயாரித்த தென்காசிப்பட்டணம், பாறை, கம்பீரம், சதுரங்கம் போன்ற படங்களுக்கு பி.ஆர்.ஓ.வாக பணியாற்றியு‌ள்ளா‌ர்.பங்கஜ் மேத்தாவின் தயாரிப்பில் சத்யராஜ் நடித்த மாறன், பாக்யராஜ் முக்கிய வேடத்தில் நடித்த மாணவன் நினைத்தால், ரஞ்சித் நடித்த பதவி படுத்தும் பாடு, ஆஹா எத்தனை அழகு, சித்திரைச் செல்வனின் ஜதி, ஆக்ரா போன்ற படங்களிலும் மக்கள் தொடர்பாளராக பணியாற்றி இருக்கிறா‌ர். ‌படங்கள் தவிர, நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், நடிகை சுஜா, இசையமைப்பாளர் தஷி ஆகியோருக்கும் பத்திரிகைத் தொடர்பாளராக பணியாற்றி வருகி‌றா‌‌ர்.

2003-ம் ஆண்டு தினகரன் நாளிதழ் திரைப்பட விருது வழங்கும் விழாவில் சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான விருதும், 2007-ம் ஆண்டின் சிறந்த மக்கள் தொடர்பாளருக்கான எம்.ஜி.ஆர்.-சிவாஜி விருதினையும், மெல்லிசை மன்னர் எம்.எஸ்.வி கைகளால் கண்ணதாசன் விருதினையும் பெற்றுள்ளார்‌.

திரையுலகம் நடத்தியுள்ள பல்வேறு நட்சத்திரக் கலை விழாக்கள், கிரிக்கெட் போட்டிகள், விருது வழங்கும் விழாக்களுக்கு ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார்‌. காவிரி நதி நீர் தொடர்பாக திரையுலகமே திரண்டு நடத்திய போராட்டம், தி‌ருட்டு விசி.டி எதிர்ப்புப் பேரணி ஆகியவற்றுக்கும் ஒருங்கிணைப்பாளராக செயல்பட்டுள்ளார்‌. சமீபத்தில் ‘ராசாத்தி’ எனும் டெலி பிலிம் ஒன்றை இயக்கியவர்‌, அடு‌த்து‌ முழுநீள படத்தை இயக்கும் முயற்சியில் உள்ளா‌ர்.தென்னிந்திய திரைப்பட மக்கள் தொடர்பாளர் யூனியன் செயலாளராக கடந்த 5 ஆண்டுகளாக செயல்பட்டு வருகி‌றா‌‌ர்.
எஸ்.செல்‌வ‌ம்

Thiruthuraipoondi History

Thiruthuraipoondi is an Agricultural Town located south of District Thiruvarur. It is covered more than 25 villages. Most of the people doing agricultur. A Famous Piravimarundeesar Temple is locating center of the town. This temple is 200 years old. Satellite pictures and carbon dating of some ancient beaches between Thiruthuraipoondi and Kodiyakarai show the Thiruthuraipoondi beach dates back to 6,000 years and the Kodiyakarai beach to 1,100 years. In other words, the sea was near Thiruthuraipoondi 6,000 years ago and reached Kodiyakarai around 1,100 years ago.
Sri Kothandaramar Temple at THILLAIVILAGAM in Tiruthuraipoondi Taluk. It is 20 km from Tiruthuraipoondi
JAMBAVANODAI DHARGA in Tiruthuraipoondi Taluk. Holy place for Muslims. 53 km from Tiruvarur and 25 km from Tiruthuraipoondi
MUTHUPETTAI (JAMBAVANODAI) LAGOON in Tiruthuraipoondi Taluk. 56 km from Tiruvarur
Bird Sanctuarie at UDAYAMARTHANDAPURAM in Tiruthuraipoondi Taluk. Udayamarthandapuram is 20 km from Tiruthuraipoondi
Mr Thiruthuraipoondi Subramania Srinivasan better known as S.S. Vasan born here. He was Writer, journalist, magazine editor, publisher and movie maker. He founded the Gemini Studio in 1940, which was one of the most successful film production units. Vasan made blockbusters in Tamil, Telugu, and also Hindi. Vasan's memorable films include Mangamma Sabatham, Balanagamma, Chandralekha, Apoorva Sahotharargal, Vanjikottai valiban, Nishan, Gharana, Grihsati and Paigham. Chandralekha was his magnum opus, the film was shot for 5 years (1943-1948).
And A Famous Government Higher Secondary School is locating 1 km away from city. It was built by British Government in 1936. It is connecting to 5 major towns like Thiruvarur, Mannargudi, Pattukkottai, Nagapattinam and Vedaranyam.

Economy
Agriculture is the main occupation for people living in Thiruthuraipoondi and surrounding areas. Rice and dhal items grow here. The short term Kuruvai and long term Samba rice crops are cultivated depending on the water sources.

Demographics
As of 2001 India census[2], Thiruthuraipoondi had a population of 22,905. Males (11,272) constitute 49% of the population and females (11,633) 51%. Thiruthuraipoondi has an average literacy rate of 74%, higher than the national average of 59.5%: male literacy is 79%, and female literacy is 70%. In Thiruthuraipoondi, 11% of the population is under 6 years of age.

Area Details
Postal code - 614713
STD Code - 04369