பொருளாதார முன்னேற்றம்
தேடி புறப்பட்டோம்
பண்டிகையையும், திருவிழாவையும்
காரணமாக்கி ஊர் நோக்கி பயணித்தோம்
காலம் கரைந்து, கடந்து போக...
பண்டிகைகளை கூட - தொலைபேசி
தொடர்புக்குள் முடக்கி விட்டோம்…
அவ்வப்போது வரும் ஊர்
ஞாபகங்களை மெண்டு முழுங்கி
விட்டோம்…
உன் கல்யாணத்திற்கு கன்டிப்பாக வருவேன் - என்று
சொன்ன வாக்கை கூட காப்பாற்ற முடியாத
நண்பர்காளகிவிட்டோம்….
வருத்தங்கள் மிஞ்சும் போது - அதில்
ஏக்கங்கள் எரிந்து விடுகின்றன…………..
பொருளாதாரம் தேடி புறப்பட்டோம்
நம் ஆதாரம் இப்போ எங்கே?
என்ற தேடலில்
ஊரை விட்டு சில மைல்கள் தூரத்தில் இருக்கும்
ஒரு பொருளாதார விரும்பி…………………
Wednesday, November 24, 2010
Subscribe to:
Posts (Atom)